காலக்கணியம் 2017 to 2037
!! "காலக்கணியம் 2017 to 2037"!!
சித்தர்கள் The Ascended Masters
ஓம் ஆசான் காகபுசண்டர் திருவடிகள் போற்றி.....
கலியுகத்தை மாயையின் பிடியிலிருந்து மீட்கவும், உலகமாந்தரை போலி மத குருக்களின் பிடியிலிருந்து மீட்கவும் ஆசான் ஞானபண்டிதரான முருகப்பெருமான் தலைமையில் சித்தர்கள் ஆட்சிக்காலம் நெருங்குகின்றது.
தீர்க்கதரிசிகள் என்றுமே எதையுமே தீர்க்கமாகக் கூறுவதில்லை சூட்சமமாகவே கூறிப் போயுள்ளார்கள். நோஸ்ட்ராடாமஸ் அவர்கள் கூறிய வேறு சம்பவங்களின் கால அட்டவனையைக் கணித்தும், சித்தபெருமானார் காகபுசண்டர் போன்றோரின் கணிப்பையும் இணைத்துப் பார்க்கும்போது 2017-2037ற்கு இடைப்பட்ட காலப்பகுதி பல மாற்றங்கள் நடைபெறும் காலமாகக் கணிக்கப்பட்டுள்ளது. நன்றி.
வீர பிரமேந்திர சுவாமிகளின் காலக்ஞானம் - (கலிநடப்பு - முடிவு)
==========================
கலியுகத்தில் நாட்டு நடப்பு எவ்வாறு இருக்குகும் என்று கோரக்கர் மட்டுமல்லாது, நந்திதேவர், சினேந்திரமாமுனிவர் முதலான பல சித்தர்கள் பாடியிருப்பதாக நாம் அறிகிறோம். இப்பொருள் பற்றி சுமார் 400 ஆண்டுகளுக்கு முன்னர் (கி.பி. 1604-1693) தெலுங்கு தேசத்தில் வாழ்ந்த ஸ்ரீவிராட் போத்தலூரி வீரபிரம்மேந்திர சுவாமிகள் என்பார், "சாந்திர சிந்து" என்னும் வேதமாகிய "காலக்ஞானம்" என்னும் தீர்க்கதரிசனத்தை 14,000 ஒலைச் சுவடிகளில் தெலுங்கு மொழியில் இயற்றி, அதை அவர் தங்கியிருந்த பனகானபள்ளி என்ற ஊரில் ஒரு புளிய மரத்தின் அடியில் புதைத்து வைத்துவிட்டு, அதில் கண்ட விஷயங்களை மக்களுக்குப் போதித்து வந்தார். அவருடைய வாழ்க்கை வரலாற்றைப் பற்றி தெலுங்கு மொழியில் தோன்றிய நூல்களில், அவர் கலியுகத்தின் தன்மை பற்றிக் கூறிய தீர்க்கதரிசனங்கள் இடம்பெற்றுள்ளன. தெலுங்கு மொழியிலிருந்து திரு. டி.எஸ்.தத்தாத்ரேய சர்மா என்பவர் தமிழாக்கம் செய்து "ஜெகத்குரு வீரபிரம்மேந்திர சுவாமிகள் வாழ்க்கைச் சரித்திர தத்துவம்" என்ற தலைப்பிலும், ஜே.ராவுஜி என்பவர் "காலக்ஞான தத்துவம்" என்ற தலைப்பிலும் வெளியிட்டுள்ளனர். திரு. தத்தாத்ரேய சர்மா என்பவரின் நூலில் பக்கம் 33,41, 67, 68, 100-3 கண்ட தீர்க்கதரிசனங்களைக் காண்போம்.
ஆணுக்குப் பெண் வித்தியாசமற்று தோற்றத்திலும் செயலிலும் ஒன்றுபட்டுப் போகிறது.
ஒருவனுக்கு ஒரு மனைவி என்ற நிலை கெடும்.
அரசே பெண்களின் கருச்சிதைவுக்கு ஆதரவும் ஊக்கமும் அளிக்கும்.
விதவை மறுமணம் செய்து கொள்வாள்.
பெண்களின் தூய்மை, நாகரிகம் என்னும் மாயவசத்தால் அழிந்துபடும்.
மகன் தந்தையையும், தந்தை மகனையும் மோசம் செய்வர்; பந்த பாசங்கள் அற்றுப் போகும்.
கணவனை நிந்தித்து துன்புறுத்தும் மனைவியும், பெற்ற தாய் தந்தையரைப் பேணாத மக்களும் பெருகிவிடுவர்.
பெற்ற மக்களையே விற்றுப் பிழைக்கும் நிலை பெற்றோருக்கு ஏற்படும்.
அழகுடைய மங்கையர் விலைபொருளாகி விற்பனைக்கு உள்ளாகுவர்.
திருமணங்கள்,குலம் கோத்திரமின்றி நடைபெறும். அதற்கு அரசே ஆதரவு அளிக்கும்.
உயர்குலப் பெண்கள் நாட்டியம், பாட்டு, கச்சேரி, நிழற்படம் என்ற மோகத்தில் கெட்டழிவர்.
தெய்வ நம்பிக்கை தளர்வடையும்.
தெய்வ வழிபாடு செய்வோருக்கு தரித்திரம் மிகுதியாகும்.
குலத்தொழில்கள் மாறுபடும்.
ஆலயங்களில் கள்ளத்தனம் நிறையும்.
ஆலயங்களில் பிராமணர்களுக்குப் பதிலாக தாழ்த்தப்பட்ட குலத்தோர் அர்ச்சகர்களாக மாறுவர்.
சைவர்கள் வேத சாரத்தை விட்டு விலகுவர்; மாமிசம் போன்ற அசைவ உணவுகளை உட்கொள்ளுவர்.
சாத்திரங்கள் பொய் என வாதிடப்படும்.
வேதங்களின் பொருள் மாற்றமடையும்; (வேதங்களில் எத்தனையோ இடைச் செருகல்கள் ஏற்பட்டு விட்டன என்பது சரித்திரம் கண்ட உண்மை.)
வேதம் ஓதுவேர் வேதங்களைத் தம் சுயநலம் கருதி வியாபாரமாக்குவர்.
திருப்பதி ஆலயச் செல்வங்கள் திருடிச் செல்லப்படும்.
அரசர்களின் ஆளுகைக்கு மாறாக மக்களாட்சி உலகெங்கும் ஏற்படும். ஆனால் நடைமுறையில் அவை அராஜக வழியை பின்பற்றும்.
முஸ்லீம்களின் ஆதிக்கமும் அரசும் பாதிப்படையும்; வஞ்சனைகள் தலைதூக்கும்.
புதுவித அரசியல் அமைப்புகள் ஏற்படும்; தவறான முறையில் மக்கள் நடத்தப்பட்டு அதன் காரணமாக மக்களின் நிலை சீர்கெட்டுப் போகும்.
மனிதன் பறவைகள் போல ஆகாயத்தில் பறப்பான். ஆனால், அவன் பார்வை கழுகுகள் போலே கீழ்நோக்கி மாய மலங்களிலேயே மோகம் கொள்ளும்.
நிழற்படங்கள் அசைந்தாடும்; அது தர்மவழிகளை அழிக்கும்.
குதிரை, மாடுகள் வழி நடத்தும் வாகனங்களுக்கு மாறாக இயந்திர வாகனங்களும் அதிதுரிதப் போக்குவரத்தும் நடைபெறும்.
இயந்திரங்கள் நன்மைக்காக அறிவின் பலத்தால் பெருகிடினும், மனிதன் மனிதனாக இல்லாது இயந்திரமாக மாறி நல்லுணர்வுகளை இழப்பான்.
இவ்வுலகில் நியாங்கள் செயலற்றுப் போகும் அநியாயங்களே தலையோங்கி நிற்கும்.
உண்மகள் பொய்யாகும்; பொய்மைகள் உண்மையாகத் தோன்றும்.
நல்லவைகளுக்குப் பெருமை அற்றுப் போகும்; இவ்வுலகின் கண் தீமைகளுக்கே முதலிடம் அளிக்கப்படும்.
பொருளாசை மக்களை மிருகமாக்கி, கொலை வெறியைத் தூண்டிவிடும்.
மனிதருள் போட்டி பொறாமை பெருகி ஒருவரை ஒருவர் தாக்கிக்கொண்டு தாழ்வடைவர்.
ஒருவர் பொருளை மற்றவர் அபகரித்துச் செல்வர்.
சாந்தம் குறையும்; கோபம் அதிகரிக்கும்.
கபட வேடதாரிகளால் மக்கள் ஏமாற்றப்படுவர்.
போதைப் பொருள்கள் பெருகி, மக்கள் அதன் வாய்ப்பட்டு பெருவாரியாக அழிந்து போவார்கள்.
உணவுப் பொருள்களின் தரம் குறைந்து, அற்ப லாபம் கருதி கலப்படம் செய்து விற்பனைக்கு வருவது பெருகும். அதனால் புதிய புதிய நோய்கள் பரவும்.
கண்பார்வை மிகையாக கெடும்.
எண்ணற்ற ரோகங்கள் புதிது புதிதாகத் தோன்றி மக்களை அழிக்கும்.
மக்களின் சராசரி வயது குறையும்.
செம்பு, பித்தளை போன்ற உலோகங்களால் தயாரிக்கப்பட்ட நகைகள் போன்ற பொருட்களுக்குத் தங்க முலாம் பூசப்பட்டு அவை தங்கம் என்று மக்களிடம் ஏமாற்றப்பட்டு விற்கப்படுகின்ற நிலை ஏற்படும்.
முன்னேற்றம் உள்ளது போல் தோன்றினாலும் மனிதனின் குணங்கள் விகாரப்பட்டு அழிவை தனக்குத்தானே தேடிக் கொள்வான்.
மூன்று தலைகொண்ட பசுங்கன்று ஜனிக்கும். அதற்கு இரண்டு யோனிகள் இருக்கும். அவைகளில் ஒன்று மனிதத் தன்மை கொண்டதாக இருக்கும்.
நமது பாரத தேசம் இரண்டாகப் பிளக்கப்படும்; பிறகு அது மூன்று பாகங்களாகும்.(இந்தியா, பாகிஸ்தான், வங்காள தேசம்)
வங்காள தேசம் என்னும் பிரிவு, பல உயிரிழப்பிற்கும், புயலுக்கும், பெருவெள்ளத்திற்கும் ஆளாகும். மக்களின் சேதம் மிகையாகும்.
பாரத தேசத்தில் மக்களின் ஜனத்தொகை அளவுக்கு அதிகமாகப் பெருகிவிடும். அப்போது ஜனத்தொகையைக் குறைக்க அரசு செயல்படும்.
இவ்வுலகில் பல பாகங்களில் பூகம்பங்களும் விஷ சக்திகளும் ஏற்பட்டு பெரும் அழிவும் உயிர்ச் சேதங்களும் ஏற்படும்.
இயற்கையின் பருவகாலங்கள் நிலைகெட்டுப் போகும்; பருவங்கள் கடந்து மழை பொழியும்.
இயற்கை வளங்கள் எல்லாம் விஷக்காற்றால் அழிவு பெறும்.
நிலமகளிடம் ஆழ்ந்திருக்கும் செல்வங்கள் மக்களின் சுக போகத்திற்கு வெளிக்கொணரப்படுவதால் நிலமகள் பலமிழந்து நிலநடுக்கங்களும், பெருத்த பூகம்பங்களும் ஏற்படும். எரிமலை வெடித்து உலகை அழிக்கும்.
கலியின் முடிவு பிரளயமாகி உலகே அழியும். அதன் காரணமாகப் பெருவெள்ளங்கள் தோன்றி ஊரையும் மக்களையும் அழிக்கும்.
பூமியில் சித்தர்களின் ஆட்சி துவங்குகிறது !!!
==========================
கி.பி.2017 முதல் கி.பி.2037க்குள் நமது பூமியில் சித்தர்களின் ஆட்சி துவங்குகிறது.சித்தர்கள் பாரதத்தை மையமாகக் கொண்டு இந்த பூமியை ஆட்சி செய்யப்போகிறார்கள்.பழனி மலையில் இருக்கும் நவபாஷாணமுருகன் சிலை சிதைந்துவிட்டது நம் அனைவருக்கும் தெரியும்.இந்த சிலையை போகர் நிறுவினார்.அவர் இதே போல் ஒன்பது நவபாஷாணசிலைகளை உருவாக்கி பழனிமலையிலும்,அதைச் சுற்றியுள்ள சில இடங்களிலும் மறைத்து வைத்திருக்கிறார்.அதில் ஒன்று பழனி மலையிலிருந்து சபரி மலைக்குச் செல்லும் ஒரு இடத்தில் இருக்கிறது.அதை ஒரு நாகம் காவல் காக்கிறது.கிபி 2017 முதல் கிபி 2037 க்குள் போகர் விரும்பும் ஒரு குறிப்பிட்ட நேரத்தில் வேறொரு சித்தரால் பழனி மலையில் புதிய நவபாஷாண சிலை நிறுவிவிடுவார்.அவ்வாறு நிறுவப்பட்டதும்,பாரதம் உலக வல்லரசு நாடாக மாறிவிடும்.
நமது பூமியில் சித்தர்கள் ஆட்சி துவங்கும் முன்பு,சித்தர்கள் ஒவ்வொருவராக நீண்ட கால தவத்திலிருந்து எழுந்து வரத்துவங்கியுள்ளனர்.2004 ஆம் ஆண்டில் உண்டான மாபெரும் ஆழிப்பேரலை(சுனாமி) காகபுஜண்டர் சித்தரின் தவம் கலைந்து எழுந்ததற்கான ஆதாரமாக தினத்தந்தியில் ஒருவர் முழுப்பக்க கட்டுரையே எழுதினார்.அது உண்மைதான்.இந்தியா,மலேஷியா,
இதே போல்,போகர் தவம் கலைந்து எழும்போது,சென்னை மாநகரம் கடல் அலைகளில் கடுமையாகப் பாதிக்கப்படும்.தென்னிந்திய
கங்கையும் காவிரியும் இணைந்து பிரம்மரிஷி மலை அடிவாரத்தில் ஓடும்.பல கிராமங்கள்,நகரங்கள் அழியும்;விஞ்ஞானம் தலைகீழாக மாறும்.இந்த மாற்றங்கள் 2017 லிருந்து 2037க்குள் நடந்துவிடும். அணைக்கட்டுக்கள் உடைந்து மின்சாரம் அறவே இருக்காது;இயற்கையின் சீற்றத்தால் மக்கள்தொகை குறைந்துவிடும்.
நெருப்பில் அழிவு ஏற்படும்போது கொங்கணவர் தோன்றுவார்!120 வருடம் வரை கொங்கணவர் ஆட்சி ஏற்படும்.நேர்மையும் சத்தியமும் பெருகும்.தெய்வீகம் பெருகும்.காகித நோட்டுக்கள் இருக்காது.தங்க நாணயங்கள் புழக்கத்துக்கு வந்துவிடும்.பக்கம் 92
பல மேலைநாடுகள் அனைத்தும் பொசுங்கிப்போய்விடும்.அசுர சக்திகளை கல்கத்தா காளி அப்படியே அடக்கி மாய்த்து தின்றுவிடுவாள்.பிறகு இந்த பிரபஞ்சத்திலிருக்கக்கூடிய பிரத்திங்கரா தேவியினுடைய சக்தியானது ஞானசித்தருடைய ஆத்ம சக்தியின் ஒளிப்பிழம்பாகத் தெரியும்.இதனை கமலமுனி நாடி சூட்சுமமாக வெளிப்படுத்தியுள்ளது.ஏனென்
இனி வரக்கூடிய காலமானது பிரம்மாவிடமிருந்து ஆஞ்சநேயரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது.ஆஞ்ச
தமிழ்நாடுதான் உலகத்திற்கே வல்லரசு ஆகப்போகிறது.உலகமே அதனுடைய ஆட்சியின் கீழ் வரப்போகிறது.இதனை ஞானத்தினால் மட்டுமே உணர முடியும்.விஞ்ஞானத்தினால் ஒருபோதும் உணர முடியாது.ஆனால்,உலக நாடுகள் அனைத்தையும் இந்தியா தனது பாதத்தால் மிதித்துக் கொண்டு ஆட்சிபுரியப் போகிறது.2017 லிருந்து உலகமே இந்தியாவிற்கு அடிமையாகப் போகிறது.இதனை எல்லோரும் உணரப்போகிறார்கள்.
ஏனெனில் மேலைநாட்டில் எல்லாம் பணவெறி பிடித்தும்,அகந்தையினாலும் மதம் என்ற கர்வத்தினாலும் ஆண்டுகொண்டிருக்கிறார்கள்.இ
உலகத்திலுள்ள அத்தனை சக்திகளும் 2017க்குப் பிறகு அந்த சித்தரிடம் ஆவாஹனம் ஆகிவிடும்.உலகம் இதை எதிர்காலத்தில் உணரப்போகிறது.வரக்கூடிய காலகட்டங்கள்,வரக்கூடிய தத்துவங்களில் எல்லாம் அவர் பெயர் காலத்தால் அழியாமல் இருக்கப்போகிறது என்பதை நான் அறிவேன்.
2037க்குப்பிறகு அவரால்தான் தமிழ்நாடே உலகிற்கு வழிகாட்டப் போகிறது.அவர் யார் என்பதை பரஞ்சோதி சுவாமிகளுக்கு அகத்தியர் காட்டியுள்ளார்.நான் கமலமுனி நாடி மூலமாகத் தெரிந்துள்ளேன்.2017க்குப்ப
பழனி,திருஅண்ணாமலை,திருப்பத
தகவல்:சித்தர்களின் மகிமை,பக்கம்24
காகபுசண்டர் பிரும்மரிஷி மலை.
==========================
யுகங்கள் மறைந்தாலும், மகா பிரளயத்தினால் உலகமே அழிந்தாலும் தாம் மட்டும் என்றும் மறையாமல், அழியாமல் அனைத்தையும் சாட்சியாய் நோக்கிக் கொண்டிருக்கும் ஒரே மகரிஷி ஸ்ரீ காகபுஜண்ட மகரிஷி மட்டும் தான். பல கல்ப கோடி பிரம்மாக்களையும், சிவனையும், விஷ்ணுவையும் பார்த்த பெருமைக்குரியவர். நம்பி கை தொழ நம் பாவங்கள் அனைத்தையும் நசிக்க வைப்பவர். பூலோக இந்திரன் என்று தேவர்களால், ரிஷிகளால் என்றும் போற்றப்படும் மகா முனிவர் ஸ்ரீ காகபுஜண்டர். அவரும் அவரைப் போன்ற மகா முனிவர்களான ,ஸ்ரீ காலாங்கி, ஸ்ரீ புலிப்பாணி, ஸ்ரீ கொங்கணர், ஸ்ரீ கோரக்கர் போன்ற பலநூறு சித்தர்கள் வாசம் செய்யும் மலை பிரும்மரிஷி மலை.
மலைப் பகுதி.
============
இம்மலை திருச்சி பெரும் புலியூர் என்ற பெரம்பலூர் அருகில் உள்ள எளம்பலூர் கிராமத்தில் அமைந்துள்ளது. 210 மகா சித்தர்கள் இங்கு வாசம் செய்வதாக வரலாறு கூறுகின்றது. இந்த பிரும்மரிஷி மலையின் அடிவாரத்தில் காகபுஜண்டர் தலையாட்டி சித்தர் ஜீவ சமாதி உள்ளது. மகத்தான சக்தி படைத்தது.
இங்குள்ள மலையின் மீது அண்ணாமலையில் ஜோதி ஏற்றப்படுவது போல மிகப் பெரிய கொப்பரையில் நெய் தீபம் ஏற்றப்படுகிறது. மலையின் கீழ் ஒரு சிறிய கோயில் இருக்கிறது. மிகுந்த அதிர்வலைகள் உடையதாய் இம்மலையும், இவ்வாலயமும் விளங்குகிறது.
வருங்காலத்தில் ஸ்ரீ தேவி நளினி அம்மனாய் தோன்றி, ”ஸ்ரீ ரங்கா கலி கொண்டு வா!” என்று கூறி கலி முடிக்கும் போது, மகா சித்தர் ஸ்ரீ காகபுஜண்ட மகரிஷி, ஒரு கோடி மனித ஜீவ வித்துக்களை பாதுகாக்கும் மாமலையாக இப் பிரும்மரிஷி மலையே விளங்கப் போவதாக சித்தர் வாக்கில் கூறப்படுகிறது.
தலையாட்டிச் சித்தர்.
==================
இங்கு ஜீவ சமாதி கொண்டுள்ள தலையாட்டிச் சித்தர் முக்காலமும் அறிந்தவர். மகா ஞானி. இன்னமும் சூட்சுமமாக தம்மை நாடி வருவோருக்கு அருள் செய்து வருகிறார். அவர் எழுதிய காலஞானம் நூலில் வருங்காலத்தில் நடக்கும் பல அதிசயமான தகவல்கள் பற்றி கூறப்பட்டுள்ளது. குறிப்பாக இந்தியாவில் சுனாமி வருவதற்கு முன்னால் அதுபற்றிய தகவல்கள் அந்நூலில் கூறப்பட்டுள்ளதாக அறிய முடிகிறது. அதுமட்டுமல்லாமல் உலகில் நடக்கப் போகும் பல விஷயங்கள் பற்று அந்நூலில் கூறப்பட்டுள்ளதாம்.
முன்பு பிரபல திரைப்பட இயக்குநராக இருந்த ராஜகுமார் என்பவர், தலையாட்டி சித்தரிடம் உபதேசம் பெற்று சீடராக மாறி, தற்போது மகா சித்தர்கள் டிரஸ்ட் என்ற அப்பீடத்தின் நிறுவனர், தலைவராக இருக்கிறார். ராஜ்குமார் சுவாமிகள் அன்னதானம், மருத்துவம், மருந்து, சூரணம், சித்த வைத்தியம் போன்ற ஆன்மீகப் பணிகளையும் சேவைகளையும் செய்து வருகிறார்.
ஆசான் காகபுசண்டர் நமக்கு சொல்லும் அறிவுரை !
==========================
'' எவன் தன சுய நலனுக்காகப் பிறரைப் பொய்யாகப் புகழுகிறானோ ,அவன் பரிசுத்தமற்றவன்.
ஒருவனுக்கு உண்மையிலேயே புகழ் இருந்தாலும் அதைத்தானே தம்பட்டம் அடித்துக் கொள்வது அல்லது பிறர் அடிப்பதைக் கேட்பது இரண்டும் மகாபாவம்.
தகுதியற்றிருந்தும் பிறர் புகழ்வதைக் கேட்டு மகிழ்வதனால் அகம்பாவம் தான் பிடிக்கும் .''
-Mrinalini
சித்தர் அறிவியல் Wisdom of Siththars
காலஞானம் நூல் புத்தகம் எங்கு கிடைக்கும்
ReplyDeletehttp://marinabooks.com/detailed/%E0%AE%B8%E0%AF%8D%E0%AE%B0%E0%AF%80+%E0%AE%B5%E0%AF%80%E0%AE%B0%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%AE%E0%AF%87%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%B0%E0%AF%8D+%3A+%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%B4%E0%AF%8D%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%88+%E0%AE%B5%E0%AE%B0%E0%AE%B2%E0%AE%BE%E0%AE%B1%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D+%E0%AE%A4%E0%AF%80%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%A4%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%9A%E0%AE%A9%E0%AE%AE%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D?id=4%208183
Delete