Posts

Showing posts from July, 2017

முருகப்பெருமானின் பேரருள் பெற்றவர்கள்!

Image
முருகப்பெருமானின் பேரருள் பெற்றவர்கள்! சித்தர்கள் The Ascended Masters யதார்த்த உலகில் பலருக்கும் அந்த இறை அனுபவம் கிட்டியிருக்கும் என்றாலும், குறிப்பிட்ட சில மகான்களின் வாழ்க்கைச் சம்பவங்களே அவனருளுக்குப் பெரிய ஆதாரங்களாகத் திகழ்கின்றன. அந்தப் பெருமை பெற்ற சில மகான்களைப் பற்றி, இங்கே: அகத்தியர், போகர், அவ்வையார், அருணகிரிநாதர், நக்கீரர், வள்ளலார் உள்ளிட்ட பல மகான்கள் இவரிடம் நிறைவுத் தீட்சை பெற்று மரணமிலாப் பெருவாழ்வு எய்திய மகான்கள். உலகில் முருகனை அறியாத தமிழர்கள், முருகனை வணங்காத தமிழர்கள் எந்த நாட்டிலும் இல்லை. அகத்தியர்தான் முருகப்பெருமானின் முதல் சீடர். தமிழை வளர்த்த சித்தர் அகத்தியர். முருகனின் ஆணைக்கிணங்க அகத்தியம் என்ற தமிழ் இலக்கண நூலை இயற்றியவர். சித்தர்களுக்கெல்லாம் சித்தர். ஆதிசங்கரர் தீராத வயிற்றுவலியால் துடித்தபோது திருச்செந்தூர் முருகனின் மீது சுப்ரமண்ய புஜங்கம் என்ற அருமையான தோத்திரத்தைப் பாட, அவரின் வயிற்றுவலி முருகன் அருளால் நீங்கியது. கடல் சூழ்ந்திருந்த அந்த தலத்தை, அவர் பாடிய சுப்ரமண்ய புஜங்கம்தான் சுனாமிப் பேரழிவிலிருந்து காத்தது என்று அப்பகுதி பக்தர்கள் இன்ற...

காலக்கணியம் 2017 to 2037

Image
!! "காலக்கணியம் 2017 to 2037"!!  சித்தர்கள் The Ascended Masters ஓம் ஆசான் காகபுசண்டர் திருவடிகள் போற்றி..... கலியுகத்தை மாயையின் பிடியிலிருந்து மீட்கவும், உலகமாந்தரை போலி மத குருக்களின் பிடியிலிருந்து மீட்கவும் ஆசான் ஞானபண்டிதரான முருகப்பெருமான் தலைமையில் சித்தர்கள் ஆட்சிக்காலம் நெருங்குகின்றது. தீர்க்கதரிசிகள் என்றுமே எதையுமே தீர்க்கமாகக் கூறுவதில்லை சூட்சமமாகவே கூறிப் போயுள்ளார்கள். நோஸ்ட்ராடாமஸ் அவர்கள் கூறிய வேறு சம்பவங்களின் கால அட்டவனையைக் கணித்தும், சித்தபெருமானார் காகபுசண்டர் போன்றோரின் கணிப்பையும் இணைத்துப் பார்க்கும்போது 2017-2037ற்கு இடைப்பட்ட காலப்பகுதி பல மாற்றங்கள் நடைபெறும் காலமாகக் கணிக்கப்பட்டுள்ளது. நன்றி. வீர பிரமேந்திர சுவாமிகளின் காலக்ஞானம் - (கலிநடப்பு - முடிவு) ========================== ========================== === கலியுகத்தில் நாட்டு நடப்பு எவ்வாறு இருக்குகும் என்று கோரக்கர் மட்டுமல்லாது, நந்திதேவர், சினேந்திரமாமுனிவர் முதலான பல சித்தர்கள் பாடியிருப்பதாக நாம் அறிகிறோம். இப்பொருள் பற்றி சுமார் 400 ஆண்டுகளுக்கு முன்னர் (கி.பி. 1604-1693) தெலுங்கு ...

சித்தர்களுக்கு எல்லாம் சித்தன் முருகன்

Image
சித்தர்களுக்கு எல்லாம் சித்தன் முருகனை பற்றிய வித்தியாசமான ஆய்வு ...... சித்தர்கள் The Ascended Masters வாசித்து பாருங்கள் .. வியந்து போவீர்கள் .. கோடி யுகங்களாக வாழ்பவராக சித்தர் நூல்கள் கூறுகின்றன. ஆனால் இன்றைய மனித ஆய்வாளர்களால் ஏறத்தாழ 9000 ஆண்டுகளுக்கு முன்பு வாழ்ந்த மகான் ஆகக் கருதப்படுபவர் முருகக் கடவுள். தமிழ் மொழியை வடிவமைத்ததால் தமிழ்க் கடவுள் என்ற சிறப்பு உண்டு. வயதாகும் நிலையை அதாவது Aging Process -ஐ நிறுத்தி, என்றும் குமரனாக, அழகனாக நீண்டகாலம் ஏறத்தாழ 4000 ஆண்டுகள் பூதஉடலுடன் வாழ்ந்து காட்டிய மகான் என்ற பெருமையும் இவருக்கு உண்டு. ’சரம்’ என்றால் மூச்சு. ’சரத்தை வயப்படுத்தினால் காலத்தை வெல்லலாம்; காலனையும் வெல்லலாம்; கடவுளையும் காணலாம்’ என்பது இவரது தத்துவம். சரத்தை வணப்படுத்திக் காட்டியதால் ‘சரவணன்’ என்ற சிறப்புப் பெயரும் உண்டு. மனிதன் இறுதியில் சவமாகக் கூடாது; சிவமாக வேண்டும். கற்பூரம் கரைவது போல் தன்னை வேறொரு பரிமாணத்திற்கு மாற்றிக்கொண்டு பிரபஞ்சம் எங்கும் வியாபிக்க வேண்டும் என்பது நிறைவான செய்தி. அதை அவரே நிரூபித்துக் காட்டியதால், ‘பெம்மான் முருகன் பிறவான்; இறவான்......